Friday, 28 October 2016
Saturday, 25 June 2016
இப்படியாகத்தானே…..
மண்ணுக்குள்ளே மனுஷன் வந்தான்
அலைந்தான் திரிந்தான் உண்டான் உறங்கினான்
ஆட்டையும் மாட்டையும் ஆனையையும் புலியையும் போல
அண்டவெளியில் ஒருசமயம் அதிரடியாய் கதிர்வீச்சாம்
(இயற்கையின் உபாதை போலும்?!)
மக்கு மனிதனை மாமேதையாய் மாற்றப் போகும்
மரபணு மாயச்சக்கரம் சுழலப்போக
விந்தையாய் விதவிதமாய்ச் சிந்தனைகள்
மனிதனின் மூளைக்குள் மானாவாரியாய் கீறல்கள்
கலைச்செல்வர், கவிச்செல்வர்…….படைத்துத் தள்ள
விஞ்ஞானியரும் மெய்ஞ்ஞானியரும்
யாதிது, எவ்வாரிது, ஏனிது…. என,
சண்டப்பிரசண்டமாய் தேடல்களைத் துவங்கினரே.
இவையெல்லாம் இன்னும்…இன்னும்…
மேலும்… மேலும்… போய்க்கொண்டே…
அப்புறம் என்னவோ தெரியலையே!
Wednesday, 29 April 2015
Subscribe to:
Posts (Atom)








